திண்ணை 22.01.2011

பிப்ரவரி 1908ல், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது, ராஜ துரோக வழக்கு சுமத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். அச்சமயத்தில், திருநெல்வேலி சென்று, வ.உ.சி.,யையும், சிவாவையும் சிறையில் சந்தித்துப் பேசினார் பாரதியார். இது சம்பந்தமாக, ஜூலை 2, 1908ல் வெளியான, தன், ‘இந்தியா’ பத்திரிகையில் அவர் எழுதியது:திங்கட்கிழமை காலை, பாளையங்கோட்டை ஜெயிலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குள்ள அதிகாரிகள் அனுமதியின் பேரில் உள்ளே சென்று, ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீ சுப்ரமணிய சிவா இருவரையும் கண்டு பேசினேன். ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையை, முன்பு நான் தூத்துக்குடியில், அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டு, புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்க்கையில், அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும், தேஜசுடனும் விளங்கியதோ, அதே மாதிரியே இப்போதும் இருக்கக் கண்டேன்.ஸ்ரீ சிவாவும் சந்தோஷமாகத் தான் இருந்தார். ஆனால், அவர் தாடி, மீசையை எடுத்துவிட்ட படியால், முகம் சிறிது மாறுபாடாகத் தெரிந்தது. ஸ்ரீமான் பிள்ளையும், சிவாவும், தங்களுடைய சொந்த காரியங் களைப் பற்றி மட்டுமே என்னோடு வார்த்தையாடாமல், உலகப் பொது விஷயங்களைப் பற்றி, வெகு உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர்! “சிவாவின் முகம், சிறிது மாறுபாடாகத் தெரிந்தது…” என்று பாரதியார் குறிப்பிட்டதை, சிதம்பரனார் சற்று விளக்கமாகவே, தன் சுயசரிதைப் பாடலிலே, பின்வருமாறு நகைச்சுவையாக விவரித்துள்ளார். “தாடியை யெடுத்திடச் சாற்றிய சிவம் தான், ‘வாடி’ என்றிடு வண்ணம்…” என்று. அதாவது, ‘வாடி’ என்று அழைக்கத் தோன்றும் விதத்தில், பெண் போன்ற தோற்றத்தில் சிவா காட்சி அளித்தார்.

***

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஜில்லா போர்டு தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக, என் கல்லூரி நண்பருடன் திருவண்ணாமலைப் பகுதிக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை, சுற்றுப்பயணம் தொடங்கியது. கடைசிக் கூட்டம் நடக்கும் போது, இரவு 12 மணிக்கு மேலிருக்கும். ஒரு கிராமத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மக்கள் பாதி தூக்கத்தில் இருந்தனர். நான் அவர்களைப் பார்த்து பேசிய போது சொன்னேன், “நீங்கள் எல்லாம் பாதி தூக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தூக்கத்தை கெடுப்பதற்கு மன்னிக்க வேண்டும். பாதி தூக்கத்தில் நீங்கள் இருக்கிற நிலையில், உங்களிடையே அதிகம் பேசுவது சரியா என்று யோசிக்கிறேன்…’ என்னோடு வந்த கல்லூரி நண்பர், மேடைப் பேச்சு பழக வேண்டுமென்று வந்தவர். அவர் நண்பர் ஒருவர், “அண்ணாதுரை, என்னென்ன பேசுகிறார் என்று குறித்து வைத்துக் கொள். மறு கூட்டத்தில் அப்படியே பேசு…” என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதை, அந்த நண்பர் அப்படியே பின்பற்றி, மறுநாள் மாலை ஆறு மணிக்குக் கூட்டம் நடக்கும் போது, அந்தக் கூட்டத்தில் முதல் நாள் இரவு ஒரு மணிக்கு நான் பேசியதையே பேசியுள்ளார்.”நீங்கள் எல்லாம் பாதி தூக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் தூக்கத்தைக் கெடுப்பதற்கு மன்னிக்க வேண்டும்…” என்று பேசினாராம். நான் பேசிய போது மக்கள் எவ்வளவு உருக்கம் அடைந்தனரோ, அவ்வளவு உருக்கம் கிடைக்கவில்லையே என்று, திரும்பி வந்த அந்த நண்பர் கேட்டார். மக்கள் கேலியாக வேறு சிரித்தனர் என்று வருந்தினார். அதைப் போல், கனம் உறுப்பினர்கள் நான் சொன்னதை எந்த நேரத்தில், எந்தச் சூழ்நிலையில் சொன்னேன் என்பதை அறியாமல், மேற்கோள் காட்டிப் பேசினர். அது தவறு என்று சுட்டிக் காட்டுகிறேன்!

— முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சட்டசபையில் கூறியது.

article source: Dinamalar

 

பார்த்தது..கேட்டது..படித்தது 22.01.2011

 

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். இரவு விருந்துக்கு சென்றோம், லென்ஸ் மாமா சகிதம். அமெரிக்க நண்பர், “எலிபண்ட் பஞ்ச்” ஒன்று ஆர்டர் செய்தார். அது ஒரு, “காக்டெயில் டிரிங்க்!” யானை லேசாக மிதித்தால் எப்படி கிறக்கம் வருமோ, அதே போன்ற கிறக்கம் இந்த உ.பா.,வில் வரும் என்பதால், இதற்கு, “எலிபண்ட் பஞ்ச்” என்ற பெயராம்! எல்லா வகை உ.பா.,விலும், “ஸ்மால், ஸ்மால்”  போட்டு, அதன் மீது கிரஷ்ட் ஐஸ் நிரப்பி சாப்பிட வேண்டுமாம்… நண்பர் கூறிய வியாக்கியானம் இது!

வழக்கம் போல, நான் ஆரஞ்சு ஜூஸ் சொல்ல, “எனக்கும் அதுவே!” என்றார் லென்ஸ் மாமா. ஆச்சரியத்துடன், நானும், நண்பரும் மாமாவை நோக்க, “இந்த டாக்டருங்களுக்கு என்ன பொழுது போக்கு… ‘கொலஸ்டிரால்’ன்றாங்க, ரத்தத்துலே கொழுப்பு சேர்ந்து போச்சு… மாரடைப்பு வந்துரும்… அது, இதுன்னு பயம் காட்றாங்க… உ.பா.,வை மூணு மாசம் சுத்தமாக நிறுத்தணுமாம்… அப்புறம் திரும்ப, ‘பிளட் டெஸ்ட்’  பண்ணித்தான், ‘ரிசல்ட்’ சொல்வாங்களாம்!”  என அலுத்துக் கொண்டார்.லென்ஸ் மாமாவுக்கு, அட்வைஸ் செய்த டாக்டருக்கு மனசுக்குள்ளேயே நன்றி செலுத்தி, நேரில் சென்றும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து, அமெரிக்க நண்பரிடம், “டாக்டர்ன்னு மாமா சொன்னதும், உலகத்திலேயே இள வயதில் டாக்டரான அம்பாட்டியின் குடும்பம் தான் நினைவுக்கு வருகிறது… வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் அம்பாட்டி குடும்பமே கம்பி எண்ணியதே... அதைப் பற்றி அமெரிக்கர் களும், அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்தியர்களும் என்ன பேசிக் கொண்டனர்?”  எனக் கேட்டேன். யானை அவரை, ‘உதைக்க’ ஆரம்பித்திருந்தது; இரண்டு, மூன்று மிடறுகள் உள்ளே சென்று இருந்தன. “கேவலப்பட்டுப் போனோம்பா… இந்த மாதிரி வரதட்சணைப் பழக்கம் நம்மிடையே இருக்கிறது என்பதே, அம்பாட்டி குடும்பத்தினர் போலீசில் சிக்கிய பின் தான் பல அமெரிக்கர்களுக்கே தெரிய வந்துள்ளது. எதற்காக வரதட்சணை வாங்குகிறோம் என்பதே அவர்களுக்கு புரியவில்லை… நம்மாலும், அவர்களுக்கு விளங்க வைக்க முடியவில்லை. ”உங்கள் ஊர் வழக்கப்படி, பெண் தானே வீட்டு வேலைகள், சமையல் வேலை, குழந்தை பராமரிப்பு, கூட்டுக் குடும்பம் என்றால், கணவனின் வீட்டார் அனைவருக்கும் பணிவிடை செய்தல், இத்தனைக்கும் மேலாக கணவனுக்கு, அவன் வேண்டிய நேரம் எல்லாம், இவளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, ‘மூடு’ இல்லா விட்டால் கூட, உடல் அயற்சியாய் இருந்தால் கூட, இன்பம் தர ஒத்துழைப்புக் கொடுக்கின்றனரே… இதற்கெல்லாம் ஆண்கள் அல்லவா பணம் கொடுத்து, மணம் செய்து கொள்ள வேண்டும்… இங்குள்ள அமெரிக்கப் பெண்களிடம் மணம் செய்து கொள்ள வரதட்சணை கேட்டுப் பாருங்கள்… கிழிந்த பழைய செருப்பால் நாலு சாத்து சாத்துவர்…” என நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும்படி பல அமெரிக்க நண்பர்களும் பேசி விட்டனர்!’ என்றார் பரிதாபமாக!கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நான், லென்ஸ் மாமாவை கவனித்தேன். அவரது கவனம் எல்லாம், “எலிபண்ட் பஞ்ச்’ல் இருந்தது. கலவையான அதன் வண்ணமும், அதில் இருந்து எழும்பும் வாசமும் மாமாவை கலங்கடிக்கச் செய்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டு, “மாமா… நீங்க எதுவுமே பேசலியே…” என்றேன். சுதாரித்துக் கொண்டவர், “எஸ்… எஸ்… இப்போ நீங்கல்லாம் அமெரிக்காவுலே, ‘செட்டில்’ ஆனவங்க… அங்கே உங்களுக்குள்ளே நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பிரச்னை கிடையாது தானே… ஏன்னா, நீங்கள் எல்லாம் வெல் எஜுகேட்டட்…” என்றார்.தலையைக் குனிந்து கொண்ட அமெரிக்க நண்பர், சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை.

பின்னர், “உலகின் எந்த மூலையில் நாம் இருந்தாலும், நம் பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்போமா? பெண்ணும், பையனும் அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து, படித்து இருந்தாலும், அவர்களது பெற்றோர் அங்கேயே 50 வருடங்களாக வாழ்ந்து இருந்தாலும் வரதட்சணை வாங்கத் தான் செய்கின்றனர்…” என்றார்.வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும், உயர் படிப்பு படித்தவர்களிடையே தான் அதிக அளவில் நிலவுகிறது என்பதற்கு உதாரணமாக, எம்.எஸ்.சி., பி.எட்., படித்த கன்னியாகுமரி மாவட்ட வாசகி ஒருவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இதோ: …என் அம்மா, பி.இ., – எம்.இ., முடித்து நல்ல வேலையில் இருக்கும் சில வரன்களைப் பார்ப்பதாக அறிகிறேன். அம்மா பார்க்கும் வரன்கள் பத்து லட்சம், பதினைந்து லட்சம் ரூபாய் என்று கேட்கும் போது, தன் இயலாமையை நினைத்து, கோபம் கொண்டு, யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்… — என எழுதியுள்ளார்.

(பதினைந்து லட்ச ரூபாய் என்பதை பேப்பரில் எழுதிப் பார்க்கத் தான் முடியும், நம்மில் பலருக்கு!)

* வரதட்சணைக் சாவுகள் இந்தியாவின் எந்தப் பகுதியில் அதிகம் தெரியுமா? மெத்தப் படித்தவர்கள் வாழும் தலைநகர் டில்லியில் தான். வரதட்சணை சாவே இல்லாத மாநிலம் எது தெரியுமா? படிப்பறிவு மிக, மிகக் குறைவாக உள்ள அருணாசலப்பிரதேசம் தான்.

* மத்திய உள்துறை அமைச்சகம் என்ன சொல்கிறது தெரியுமா?ஆண்டுக்கு ஆறு ஆயிரம் வரதட்சணைச் சாவுகள் இந்தியா முழுவதும் நடக்கின்றன…ஆனால், சுப்ரீம் கோர்ட் வக்கீல் சுபத்ரா சவுத்ரி என்பவர் என்ன கூறுகிறார் தெரியுமா?வரதட்சணையைத் தொடர்பு படுத்திப் பதிவு செய்யப்படுபவை 40 சதவீத சாவுகள் தான்! ஆனால், உண்மையில் 12 முதல் 15 ஆயிரம் வரதட்சணைச் சாவுகள் ஆண்டு தோறும் இந்தியாவில் நடக்கின்றன.

— என்ன சிந்தனை? உங்கள் மகனுக்கு எவ்வளவு வாங்கலாம் என்றா?

article source: Dinamalar

WGET to get them all from the web!

You might have come across the famous tech joke where an Internet newbie  would ask: “I want to download the Internet. Do I need a bigger hard disk?” LOL!
Well there might not be any software or command currently available to download the entire Internet, but we do have a true awesome command in Linux that can download an entire website!!! Surprised? Then read further.

WGET is a funtastic command available in all Linux distros and it could be customised(parameterised) to download an entire website,or a part of it, as well files from the Internet. Simply put, Wget is to Linux what IDM is to Windows(I have feel that I am overstating the power of IDM). Let me show you how wget could do wonders!

Lets hit the bulls eye first.

$ wget    http://getch.wordpress.com

The above command downloads the homepage of getch.wordpress.com(index.html). It is saved in the current working directory.

So now you want to download, not only the homepage but also the entire site. In other words, you may want to recursively download all the content linked in  my blogs homepage. So we will supply the recursive parameter(r) to the wget command.

$ wget   -r  -p  http://getch.wordpress.com

This means that  you also get all pages (and images and other data) linked on the front page.The parameter p tells wget to include all files, including the images. This would make the downloaded files look as they would be online.

Some sites would try to block wget requests reasoning that  it doesn’t originate from a browser. So we will disguise the wget accesses to websites to make it appear as though it originates from a browser like Firefox. This is how you should do it:

$ wget  -r   -p   -U   Mozilla    http://getch.wordpress.com

-U Mozilla does the trick here.

In order that you may not be blacklisted for running wget over a site, pause for 20 seconds in between retrievals and set the download speed accordingly.

wget - -wait=30 - -limit-rate=50K  -r   -p   -U   Mozilla http://getch.wordpress.com

Here wget waits for 30 seconds between retrievals and the download rate is confined to  50KB/s.
What if you want to pause in between downloads. Yes there is a solution for that too. Use parameter c.

$ wget  -c   http://ubunturelease.hnsdc.com/maverick/ubuntu-10.10-desktop-i386.iso

Here we are trying to download Ubuntu Linux which sizes to 700MB, So if you ever had to interrupt the download, running the above command again will let you resume from where you stopped(paused) the download.

If you want to get things done under the hood use -b.This parameter performs the download in the background so you can just take care of the other tasks.

I am lazy to enter each url every time I need to download one. So I would just enter all those URLs once in a text file and provide it as an input to the wget command so that I could just sit back and have a cup of coffee.  Now I need not download it each time, “i” would do it.

And to the final tip!
Mirror an entire website for offline reading.The format is:
$ wget - -mirror   -p - -convert-links   -P  ./LOCAL-DIR WEBSITE-URL
and to quote an example
$ wget - -mirror   -p - -convert-links    -P  /home/manojkumar  http://getch.wordpress.com

- – mirror : turn on options suitable for mirroring.

-p : download all files that are necessary to properly display a given HTML page.

- -convert-links : after the download, convert the links in document for local viewing.

-P ./LOCAL-DIR : save all the files and directories to the specified directory.

Windows has a costly alternative to wget, that could do a  part of what wget does.Teleport Software for Windows lets you download the entire site for offline browsing.For more details  and purchasing options visit: http://www.tenmax.com/teleport/

திண்ணை 09.01.2011

ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகா) கோட்டைக்கு வெளியே ஆற்றின் மறுகரையில், ஆங்கிலேயப் படைகள் முகாமிட்டு இருந்தன. மே 4, 1799ல் போர் தொடங்கி, நடந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில், திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்ய முற்பட்டான், மீர் சாதிக் என்ற கயவன். இவன், திப்புவின் நிதி அமைச்சர். சம்பளப் பட்டுவாடா நடப்பதாகக் கூறி, கோட்டையின் மேற்குப் பகுதியில், பாராவில் இருந்த படை வீரர்களில் பெரும் பாலோரை, வேறு இடத்திற்குச் செல்லும்படி உத்தரவிட்டான் மீர் சாதிக்.

கோட்டைக் காவலுக்கு வெகு சிலரே எஞ்சியிருந் தனர். இந்தக் தகவலை, ஆங்கிலேயப் படைக்கு அவன் ரகசியமாகத் தெரிவித்தான். ஆங்கிலேயர் உடனே விரைந்து வந்து, திடீர் தாக்குதல் நடத்தி, சுலபமாகக் கோட்டைச் சுவரேறி உள்ளே புகுந்து விட்டனர். அப்போது நண்பகல். திப்பு சுல்தான், அரண் மனையில் உணவு அருந்திக் கொண்டிருந்தார். எதிரிகள் கோட்டைக்குள் புகுந்து விட்டனர் என்ற தகவல் தெரிந்ததும், மன்னருக்கான வேறு எத்தகைய ஆடை, ஆபரணங்களும் இன்றி, உருவிய வாளுடன் புறப்பட்டார் திப்பு.

மெய்க் காப்பாளர்களும், விசேஷப் படையினரும், புடை சூழ்ந்து சென்றனர். போர் வெகு நேரம் நீடிக்கவில்லை. எங்கும் பிணக்காடுகள். கண்ட இடமெல்லாம், துண்டம் துண்டமாக மனித உடல்கள். ஊரே மயானமாயிற்று. “திப்பு சுல்தான் எங்கே?” என்று, ஆங்கிலேயே படைகள் சல்லடையிட்டு சலித்தன, அரண்மனை அந்தப்புரத்திலும் தேடினர். என்ன ஆனார்? புறமுதுகிட்டு ஓடி விட்டாரா? அவர்களுக்கு திகைப்பு. கோட்டையின் வடக்கு மதில் சுவரில் இருக்கும் நீர் வாசல் அருகே, குவியலாகச் சடலங்கள் கிடப்பதாக, வெள்ளையருக்குத் தகவல் வந்தது. அவற்றின் நடுவில், நெஞ்சில் விழுப்புண் ஏந்தி வீழ்ந்து கிடந்தார் மாவீரர் திப்பு சுல்தான்.

- ஜி.ஆளவந்தார் எழுதிய, “மாவீரர் திப்பு சுல்தான்!” நூலிலிருந்து…

***

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விடும் என்பது உறுதியானவுடன், இந்திய ராணுவ தலைமைத் தளபதியைத் தேர்வு செய்வதற்காக, நேரு தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப் பின் நேரு சொன்னார்…
ஆங்கில அதிகாரி ஒருவரிடம், தலைமை ராணுவத் தளபதி பொறுப்பை ஒப்படைத்து விட்டோம். ஏனென்றால், நம்மவர்களுக்கு, ராணுவத்தை நடத்திச் செல் வதற்கு போதுமான அனு பவம் கிடையாது…” என்றார். கூட்டத்திற்கு வந்த அனைவரும், இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.ஆனால், ஒரு ராணுவ அதிகாரி மட்டும், “ஐயா… ஒரு வேண்டுகோள்!” என நேருவிடம் கூறிவிட்டு, “இந்த தேசத்தை நல்ல முறையில் ஆட்சி நிர்வாகம் செய்வதற்கு கூட நம்மவர்களுக்கு போதுமான அனுபவங்கள் இல்லை. ஆகையால், நம் இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக, ஓர் ஆங்கிலேயரையே நியமித்து விடலாமா?” என்றார்.
கூட்டத்தில் அதிர்ச்சியும், அமைதியும் நிலவியது. நேரு கோபப்படாமல், “இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ தலைமைத் தளபதி பதவியை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” எனக் கேட்டார். ஆனால், அந்த ராணுவ அதிகாரி, “வேண்டாம்… எங்கள் உயர் அதிகாரியான லெப்டினல் ஜெனரல் கரியப்பா தான், இந்த பதவிக்கும், இங்கு உள்ளவர்களுக்கும் பொருத்தமானவர்!” என்றார். பிரதம அமைச்சரின் கருத்துக்கு எதிராக இப்படி கருத்து தெரிவித்தவர், லெப்டினண்ட் ஜெனரல் நட்டுசிங் ரத்டோர். அவர்தான், சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல்.

- “குடிமக்கள் முரசு!” சிற்றிதழிலிருந்து…

 

ARTICLE SOURCE:DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 9.01.2011

வயது வித்தியாசம் இல்லாமல் நட்புக் கொள்ளும் பழக்கம் என்னுடையது என்பது நீங்கள் அறியாததா?நண்பர் மகன் திருமணம். “கண்டிப்பாக வர வேண்டும்!” என, தம் சகதர்மினியுடன் சென்னை வந்து என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்துச் சென்றார். திருமணம் மதுரையில்!ரயில் கிளம்ப அரை மணிக்கு முன்பாகவே, “எக்மோர்” ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுக்கு, “சீட்” ஒதுக்கப்பட்ட பெட்டியின் அருகே, பிளாட்பாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, மாமாவின் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்குப் பின் ஒரே இடத்தில் நிலைக் குத்தி நின்றது.
அங்கே —சுரிதார் அணிந்த மூன்று இளம் பெண்கள். பிளஸ் சேலையில் ஒரு பெண். தம்மை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவருமே ரயிலில் பயணிக்கப் போகின்றனரா அல்லது ஓரிருவர் பயணப்படவும், மற்றவர் வழியனுப்பவும் வந்துள்ளனரா என என்னால் அனுமானிக்க முடியவில்லை. லென்ஸ் மாமாவை இழுத்துக் கொண்டு பெட்டிக்குள் ஏறி அமர்ந்தேன்.ரயில் கிளம்பியது. எங்களது, “கேபினில்” நடுத்தர வயதை கடந்த ஒரு பெண்மணி அமர்ந்து இருந்ததால், லென்ஸ் மாமா, பெட்டிக்குள்ளேயே, அமர்ந்தபடி வெண்குழல் வத்தி பற்ற வைக்க முடியாமல் தவித்து, அவ்வப்போது வெளியே சென்று புகைத்து விட்டு வந்து கொண்டிருந்தார். தாய்க்குலத்திற்கு மதிப்பு அளிக்கும் செயலாம் அது!செங்கல்பட்டைத் தாண்டியது ரயில். பெட்டிக்குள்ளே தாய்க்குலம் இருப்பதால், அங்கேயே உற்சாகபானமும் சாப்பிட முடியாதே!— சங்கடத்தில் நெளிந்தார் லென்ஸ் மாமா!

பெட்டியின் கண்டக்டர், மாமாவிற்கு நன்கு பழக்கப்பட்டவர். அவரிடம், “பாய்… உங்க சீட்டு காலியாத் தானே இருக்குது? அங்கே வந்து என் கச்சேரியை ஆரம்பிக்கட்டுமா?” என்றார்.கண்டக்டர்களின் சீட்டு, பெட்டியின் நடுவே, நடைபாதையில் கழிவறையை ஒட்டி அமைந்திருக்கும். இரண்டடிக்கு இரண்டடி தான் இருக்கும்.

“அங்க, ரயில்வே விஜிலன்ஸ் ஆபிசர் ஒட்கார்ந்து இருக்கான்… நீங்க பெட்டியிலே ஏறினதுமே, அந்த சீட்டை உங்களுக்காக ஒதுக்கி வைக்கணும்ன்னு முயற்சி பண்ணேன்; முடியலே. நீங்க, இந்த பக்கமா (ரயில் பெட்டியின் இன்னொரு கோடி!) உட்காருங்க… என் டிரங்க் பெட்டியை இங்கே கொண்டாந்து போடுறேன்…” என்றார்.

பின்னர் என்ன தோன்றியதோ, அந்த ரயில்வே விஜிலன்ஸ் ஆபிசரிடம் பேசி விட்டு, வந்த கண்டக்டர், “வாங்க சார்… அங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாம்…” என லென்ஸ் மாமாவின் காதைக் கடித்தார்.வி.ஆபிசரும், மாமாவும் ஒரே சீட்டில், “அட்ஜஸ்ட்” செய்து அமர, ரயில் பெட்டியின் கதவைத் திறந்து, வாசல் ஓரம் காற்று வாங்கியபடியே கண்டக்டர் உட்கார, நான் நின்றபடியே இருந்தேன்.உ.பா., சுறுசுறுவென்று மாமாவின் முகுளத்தை தாக்கத் துவங்கியது, அவரது பேச்சில் தெரிய ஆரம்பித்தது. விஜிலன்ஸ் ஆபிசரிடம், ரயில்வேயின் ஊழல்கள் பற்றி திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் போதே, வி.ஆ., “சார் நான் ரிட்டையர் ஆகிட்டேன்…” என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
மாமாவுக்கு இதை விட என்ன சாக்கு வேண்டும், முழு சீட்டையும் பிடித்துக் கொள்ள?”சார்… இரண்டு பேரும் இடஞ்சலா ஒரே சீட்டில் உட்கார்ந்து இருக்கிறோமே… நீங்க அப்படி, வசதியா கதவுப் பக்கம் தரையில் உட்காரலாமே…” என, வி.ஆ.,வைக் கிளப்பி விட்டார்.மாமாவும், விஜிலன்ஸ் ஆபிசரும், ரயில்வே துவங்கி, அமெரிக்க அரசியல் வரை பேசினர்.

விஜிலன்ஸ் ஆபிசர் நெற்றி அடி போல பேசிய ஒரே ஒரு, “பாயின்ட்” இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது…பொது வாழ்வுக்கு வந்துவிட்ட அரசியல்வாதிகளுக்கு, “மொராலிட்டி…” -ஒழுக்கம் வேணும் சார்… அமெரிக்காவுலே, கல்யாணம் ஆகாமலே, ஆணும்-பெண்ணும் சேர்ந்து வாழ்கின்றனர்… ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகும் என்ற நிலையை அடைந்த பின்னே திருமணம் செய்து கொள்கின்றனர். 13-14 வயதிலேயே, சிறுவர்-சிறுமியர், “டேட்டிங்” செய்கின்றனர் – உடல் தொடர்பை அவ்வயதிலேயே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.தனக்கு பிடித்த ஆணையோ – பெண்ணையோ வீட்டுக்கு அழைத்து வருவதை, அமெரிக்க பெற்றோர் தடுப்பதில்லை… மாறாக, தாம் பெற்றது பெண்ணாக இருந்தால், “கர்ப்பமடையாமல் பார்த்துக் கொள்…” என ஆலோசனை கூடக் கூறுகின்றனர்… இப்படி, “மொரைல்” – ஒழுக்கம் கொஞ்சமும் இல்லாத நாட்டின் மக்கள், தம்மை ஆள தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் ஒழுக்கம் மிக்கவர்களாக, தம் மனைவி தவிர மற்ற பெண்களிடம் தொடர்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கண்டிப்பாக இருக்கின்றனர் என்பதை பல சம்பவங்கள், உதாரணங்களின் மூலம் நாம் அறிகிறோம்.இப்படிப்பட்ட அரசியல்வாதிகளால் தான் நாட்டை நல்வழியில் நடத்திச் சென்று, மக்களை சுபிட்சமடையச் செய்ய முடியும் என நம்புகின்றனர்; அதுவே உண்மையும் கூட…இங்கே, நம்ம ஊரை எடுத்துக்குங்க… சட்டப்படி கல்யாணம் பண்ணாத லேடியைக் கூட பொது நிகழ்ச்சிகளுக்கு மிகத் தைரியமா கூட்டி வரும் அரசியல்வாதிகளை ஏற்றுக் கொண்டு, அந்த அரசியல்வாதிகளுக்கு ஓட்டும் போடும் ஏமாளி மக்களும் இங்கு இருக்கும் வரை நம் மக்களும் – நாடும், அமெரிக்கா போல, ஜப்பான் போல முன்னணி நிலைக்கு வரப்போவதில்லை எனக் காட்டமாக, அதே நேரம் விவரமாக அலசி ஆராய்ந்து பேசியது நாம் எல்லாரும் சீரியசாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய சமாச்சாரம்.

ARTICLE SOURCE:DINAMALAR