Installing Tracegraph2.02 application in Ubuntu

Tracegraph is a great application that comes handy to ns2 users. It eliminates the need to configure and run perl/awk scripts over the trace file. Trace file analysis simplified. Though I feel that Tracegraph is still in its infancy, its  existing scope just provides all that a researcher using ns2 needs.

The steps mentioned in this post were tested to be successful in Ubuntu 10.10 and I believe it would work in other Linux distros and Ubuntu versions too.(Remember that the command sudo doesn’t work in non-debian distributions of Linux.)

First, Download the following packages:

<Download Tracegraph>

<Download Mglinstaller>

Tracegraph seems to have been developed using Matlab and therefore supporting code is needed make it run in Linux. This is the reason behind installing mglinstaller.

Extract tracegraph202linux.tar.gz in  your homefolder. In my case this would result in /home/micman/tracegraph202

Next extract mglinstaller.gz into /home/micman/tracegraph202
A single executable named mglinstaller would appear in the tracegraph202 folder.

Next, provide executable permission to mglinstaller and run it using the following command:

$sudo chmod 777 mglinstaller

 

$./mglinstaller

You would then be prompted with an information, all you have to do is to hit ENTER.

This would create a new folder named glnx86 in the following location: /home/micman/tracegraph202/bin/

Next, copy all the folders and files in /home/micman/tracegraph202/  location and paste them into /home/micman/tracegraph202/bin/glnx86/

Finally, enter the following line in Terminal:

 $ sudo export LD_LIBRARY_PATH=$LD_LIBRARY_PATH:/home/micman/tracegraph202/bin/glnx86

Remember, micman in the above line is my account name, replace it with your account name(user name).

Exit the Terminal and Re-invoke it.

Now, navigate to this location: /home/micman/tracegraph202/bin/glnx86/

$ cd /home/micman/tracegraph202/bin/glnx86 

List all the files in this location

$ ls 

you would see an executable named trgraph in this location.Provide executable permission to this file and execute it.

$ sudo su 

 

# chmod 777 trgraph

 

# ./trgraph

To run tracegraph every time, just navigate to /home/micman/tracegraph202/bin/glnx86 in Terminal and execute trgraph as follows:

$ ./trgraph 

UPDATES:

Tip by Siddharth

Place the trgraph executable in the location /usr/bin/ so that you can execute it from the Terminal without having to “cd” into the installation directory everytime.  The command to copy the trgraph executable into /usr/bin/  looks like this:

$ sudo cp /home/micman/tracegraph202/bin/glnx86/trgraph /usr/bin

Update

If you encounter an error something like the following:

bash: ./trgraph: No such file or directory
It is probably because you are trying to run this tracegraph on a 64-bit machione.

To fix this issue, you need to install 32bit libraries, by running the following command in the Terminal:

sudo apt-get install ia32-libs 

after this you can just execute ./trgraph as mentioned in the tutorial.
This link helped me find this solution.

Was this post helpful? Then thank me by clicking <this link>

திண்ணை 27.3.2011

ஜவஹர்லால் நேரு சென்னைக்கு வந்த போது, தி.மு.க., சார்பில் கறுப்புக் கொடி காட்டத் திட்டமிட்டோம். அப்போது, கழக முக்கியத் தோழர்களை முன் கூட்டியே கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் வைக்கப் பட்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, முன்னாள் மேயர் முனுசாமி, ராஜாராம், நான் மற்றும் சிலர். எங்களை, 10 தினங்கள் வைத்திருந்து, வழக்கு ஏதுமின்றி விட்டு விட்டனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்., நீண்டநாள் சிறையில் இருக்க, படத் தயாரிப்பாளர்களும், மற்றவர் களும் விரும்பவில்லை. பெரும் முயற்சி செய்து, எங்களை விட அவர் முன்னதாக வெளியில் செல்ல ஏற்பாடு செய்து விட்டனர்.

அவர் சிறைக்கு வந்ததும், எங்களை எல்லாம், “சி” வகுப்புக்கு அழைத்துச் சென்றனர்; நாங்கள் செல்ல மறுத்தோம்; பிறகு, பலவந்தப் படுத்தி அனுப்பினர். ஆனால், அவரை, “பி” பிரிவுக்கு அனுப்பச் சம்மதித்தனர். “எல்லாருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால் தான், நானும் இருக்க முடியும்…” என்றார் எம்.ஜி.ஆர்., அதன் பின், எல்லாரையும், “பி” வகுப்பு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர், “உள்ளே” இருக்கிறார் என்றவுடன், நண்பர்கள் பழங்களாக அனுப்பத் தொடங்கி விட்டனர். மேலும், எங்களுக்கு சட்டப்படி உள்ளே அனுமதிக்கப்படும் எல்லா பொருட் களும் ஏராளமாக வந்து குவிய வைத்து விட்டார். அவற்றை, காலையில் எழுந்தவுடன் எல்லா நண்பர்களுக்கும் பகிர்ந்தளித்து, மிகுதியை, “சி” வகுப்பிலுள்ள தோழர்களுக் கும், மற்றவர்களுக்கும் அளித்து, பிறகே தான் உண்பார்.
அவர் வெளியில் சென்று விட்டார். ஆனால், அவருக்கென்று வந்து குவிந் திருந்தவை எங்களுக்கு மேலும் 10 தினங் களுக்கு உதவின. அது மட்டுமா? வெளியில் சென்றவர், மீண்டும் ஒருமுறை வந்து விசாரித்து விட்டுப் போனார்.

—”தில்லை வில்லாளன்” ஒரு கட்டுரையில்…
(“சமநீதி” மலர் 1968)

****

ராஜஸ்தானில் கேத்திரி மகாராஜாவின் சமஸ்தானத்தில் கொஞ்ச நாள் தங்கியிருந்தார் விவேகானந்தர். அங்கிருந்து குஜராத் சென்றார். அங்கு, “லிம்படி” எனும் ஊரில் சந்நியாசிகள் வசிக்கும் இடம் ஒன்று இருந்தது. இவர் அங்கு சென்றார். அது, ஒரு தன்னந்தனியான வீடு. அதில் வசித்திருந்த சாதுக்கள் சிலர், எத்தனை நாள் வேண்டுமானாலும் அங்கு தங்கி யிருக்கலாமென்று கூறி, அன்புடன் இவரை வரவேற்றனர்.

அம்மனிதர்களுடைய ஒழுக்கத்தைப் பற்றி முதலில் சுவாமிகள் சிந்திக்கவில்லை. ஆனால், இரண்டு மூன்று நாளில் எல்லாம் இவருக்கு விளங்கி விட்டன. அவர்கள் பில்லி சூனியக்காரர்கள். குரூரமான முறையில் மக்களை பலி கொடுத்தும், அருவருப்பான நீசத் தொழில்கள் புரிந்தும், துஷ்ட தேவதைகளை வசப்படுத்துவதும் அவர்களது நோக்கம். அத்தகையவர்கள் பக்கத்து அறையில் பூஜை போடுவது சுவாமிகள் காதில் விழுந்தது. தீங்கு ஏதாவது நேரிடுமோ என்று எண்ணி, அவர் வெளி யேறப் பார்த்தார்; ஆனால், வெளிக் கதவைப் பூட்டி வைத்து, அவர்கள் காவலிருந்தனர். விபரீதக் கொள்கையும், கொடூரச் செயலும் உடைய ஒரு கூட்டத்தார் தேவாராதனையின் பெயரால் நீசத்தொழில் செய்வதுண்டு என்று சுவாமிகள் கேள்விப்பட்டிருந்தார். இக் கொடியவர்களால் தமக்குக் கெடுதியும், ஆபத்தும் நேரிடப் போகிறதென்று யூகித்துக் கொண்டாரெனினும், கடவுளை நினைத்து அவர் அமைதியாக இருந்தார்.

இது இப்படியிருக்க, சுவாமிகளைக் கண்டு தரிசிக்க ஒரு சிறுவன் இடையிடையே அங்கு வந்து கொண்டிருந்தான். அவன் வயதில் சிறியவனானபடியால், அவனைப் பற்றி சூனியக்காரர்கள் யாருக்கும் சந்தேகம் ஒன்றும் உண்டாகவில்லை. மறுநாள் காலையில் அவனைக் கண்டதும் திடீரென்று யோசனை ஒன்று சுவாமிகள் மனதில் தோன்றியது. தன் அறையில் கிடந்த ஓர் ஓட்டின் மீது, அடுப்புக் கரியால், “நான் அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன்…” என்று எழுதி, “இதை இவ்வூர் மகாராஜாவிடம் கொண்டு போய் கொடு…” என்று, அந்தப் பையன் காதில் ஓதி, ஓட்டைக் கையில் கொடுத்தார். அவனும், அதை வேட்டிக்குள் மறைத்து, வெளியே போய் விட்டான். ஒரு மணி நேரத்திற்குள் சிப்பாய் கூட்டம் ஒன்று அங்கு வந்து விட்டது. சுவாமிகளும் அந்த பாதகர் கையிலிருந்து மீண்டார்.

-சுவாமி சித்பவானந்தர் எழுதிய, “ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்” என்ற நூலிலிருந்து…

ARTICLE SOURCE : DINAMALAR

பார்த்தது..கேட்டது..படித்தது 27.3.2011

வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும், “ஸ்டிரீட்-கிட்ஸ்” (STREET KIDS)— தெருவில் அலையும் அனாதை பிச்சைக்காரக் குழந்தைகளின் தொல்லை இருந்து தான் வருகிறது.

நம்ம ஊரைப் பொறுத்தவரை இவ்வகை குழந்தைகள், கையில் உண்டியல் ஏந்தி, காவி உடை அணிந்து, “நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி, “மாரியம்மன் கோவிலுக்கு காணிக்கை போடுங்கள்…” என்றோ, “சபரிமலை போகிறேன்; காசு கொடுங்கள்…” என்றோ பிச்சை எடுக்கின்றனர்.

சில குழந்தைகள், வெளியூர் பஸ் நிலையங்களில், புறப்படக் காத்திருக்கும் பஸ்களில் அமர்ந்திருக்கும் பயணிகளின் மடியில் அச்சிடப்பட்ட சீட்டு ஒன்றை வைத்துக் கொண்டே சென்று, பின்திரும்பி வந்து, வாயைத் திறந்து உள்நாக்கைக் காட்டி, தமக்கு அது இல்லை என்றும், தாங்கள் அனாதை என்றும் கூறி பிச்சை கேட்பர்.

இது போன்று பிச்சை கேட்டு வரும் சிறுவர்களில், 90 சதவீதம் பேர், பிற்காலத்தில் ஏதோ ஒரு நியாயமான வேலையைத் தேடி, வாழ்க்கையைத் தொடர்கின்றனர். மீதமுள்ள, 10 சதவீதத்தினர், “கிரிமினல்”களாக, அடியாட்களாக, திருடர்களாக, கொள்ளைக்காரர்களாக, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களாக, கஞ்சா விற்பவர்களாக, சந்தனக்கட்டை கடத்துபவர்களாக மாறி விடுகின்றனர்.

வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமே இந்தப் பிரச்னை இருப்பதாக எண்ண வேண்டாம். அமெரிக்காவில் சில மாநிலங்களில் கூட இப்பிரச்னை உள்ளது. குறிப்பாக, நியூயார்க் மாநிலம், “குயின்ஸ்” மாவட்டத்தில், சிக்னலுக்காக காரில் நிற்கிறீர்கள். சில சிறுவர்கள் கையில் துணியுடன் ஓடிவந்து, உங்கள் கார் கண்ணாடிகளை வேக, வேகமாகத் துடைப்பர். பச்சை வண்ணம் சிக்னலில் விழுந்து, நீங்கள் வண்டியைக் கிளப்பும் முன், அவர்களுக்கு காசு கொடுத்தாக வேண்டும்; இல்லையேல், கூர்மையான ஆணியைக் கையில் வைத்திருப்பர். அதை கொண்டு, “சர்” என காரில் கோடு கிழித்து விடுவர்.

ஒரு டாலருக்கு கஞ்சப்பட்டு, 100 டாலர் செலவு செய்ய வேண்டியதாகி விடும். இது போன்ற பிரச்னை, குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றாத ஏழைப் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளால் ஏற்படுகிறது. “மரம் வைத்தவன் தண்ணீர் விடாமலா போவான்?” என, ஏதோ தத்துவத்தைப் பேசி, குழந்தைகளைப் பெற்று, அவர்களைக் காப்பாற்ற இயலாமல், தெருவில் விட்டு விடுகின்றனர். இவர்கள் பின்னாளில், “கிரிமினல்”களாகி விடுகின்றனர்.

இந்தப் பிரச்னை, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தலை விரித்து ஆடுகிறது. அங்கு, சிறுவர்கள், கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு அலைகின்றனர்; இன்னும் சில சிறுவர்கள், துப்பாக்கி கூட வைத்திருக்கின்றனர்.

இவர்கள் சகல விதமான வழிப்பறிகளிலும் ஈடுபடுகின்றனர். வழிப்பறியின் போது, எதிர்ப்பவர்களை கத்தியால் கிழித்து காயப்படுத்தவோ, துப்பாக்கியால் சுட்டோ கொன்று விடுகின்றனர்.

பிரேசில் நாட்டு அரசாலும், அந்நாட்டுப் போலீசாராலும் இந்த அராஜகத்தை ஒடுக்க முடியவில்லை. நிலமை இப்படியே போனால் பின்னாளில் தமக்கும், தம் தொழிலுக்கும், நாட்டுக்குமே ஆபத்தாகி விடும் என எண்ணிய பல தொழிலதிபர்கள், கொடூரமான புது முயற்சியில் இறங்கி உள்ளனர்.

அது — “ஸ்டிரீட்-கிட்”சை, “ஒழித்து”க் கட்டுவது! குண்டர் படையை இரவு நேரத்தில் வேனில் அனுப்பி, தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவர்கள், பாதை ஓரம் தூங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களை, “கபால்” எனப் பிடித்து வேனில் ஏற்றி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வேனை ஓட்டிச் சென்று, சிறுவனைக் கீழே இறக்கி, நான்கு பேர் சிறுவனின் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான்.

குண்டர்களில் ஒருவன், “இதுவரை, 185 சிறுவர்களை நானே கொன்றுள்ளேன். இவர்கள் எம் நாட்டின் சுமைகள், எதிர்கால ரவுடிகள். இதற்கு முன், போலீஸ் வேலையில் தான் நான் இருந்தேன். என் தாய் நாடு உருப்படாமல் போவதை போலீஸ் துறையில் இருந்து கொண்டு தடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இப்போதைய என் முதலாளியின் எண்ண ஓட்டம் எனக்கும் பிடித்திருக்கிறது. அவரது ஆலோசனைப்படி, சிறுவர்களைச் சுட்டுக் கொல்கிறேன். ஒரு சிறுவனைத் தீர்த்துக் கட்டினால், எங்களுக்கு, 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பணமும் கொடுக்கின்றனர்…” என,பேட்டியும் கொடுத்துள்ளான்.

*****

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டாலும், அவர்கள் மன நிம்மதி அடைவதில்லை… துன்பம் தொடர்கதையாகிறது எனக் கூறுகிறார் சென்னை வாசகி ஒருவர்… இதோ அவர் எழுதிய கடிதம்:

என் உறவுக்காரப் பெண் நல்ல வசதி, அழகு, படிப்பு, அடக்கம் உடையவள்; அரசாங்க உத்தியோகம் பார்க்கிறாள். திருமணம் முடிந்து, அவள் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்னரே, அவள் கணவன் இறந்து விட்டார். அவள் மாமியாரோ, தங்கமான குணம் உடையவர். மகன் இறந்த துக்கம் வாட்டினாலும் கூட, மருமகளையும், அவள் குழந்தையையும் கண் கலங்காமல் பார்த்துக் கொண்டார். பின், எல்லார் ஆசியோடு வேறு ஒருவரை, தன் மருமகளுக்கு மணமுடித்து கொடுத்தார்.
பெரிய பதவியில் இருப்பவர் மணமகன். அவரும், மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளோடு அல்லாடுபவர். என் உறவுக்காரப் பெண்ணை மணந்த உடன், அவளிடம், மிகவும் கண்டிப்புடன், “உன் குழந்தை இங்கு இருக்கக் கூடாது… உன் அம்மா வீட்டில் விட்டு விடு; அப்படி செய்தால் தான், என் குழந்தை நன்றாக வளரும்!” என்று கூறி விட்டார்.
மிகவும் கண்கலங்கிய நிலையில், தன் மகனை, அம்மா வீட்டில் விட்டாள் என் உறவுப் பெண். மாதா மாதம் குழந்தையின் செலவுக்குப் பணம் அனுப்பி விடுவாள். மீண்டும் புதுக்கணவர் மூலம் கருவுற்ற போது, “குழந்தை வேண்டாம்… அபார்ஷன் செய்து கொள்!” என்று, மனைவியின் கெஞ்சல்களைக் கூட மதிக்காமல், கருவைக் கலைக்க வைத்து விட்டார்.
என்ன தான் ஆணாதிக்கம் இருந்தாலும், எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருந்தும், படித்தவர்கள் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கின்றனரே… எனக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் உள்ளது. தன் குழந்தையை, புதிதாக வந்தவள் சீராட்டி வளர்க்க வேண்டும்; அன்புடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற ஆண், அவள் குழந்தையையும் தன் குழந்தைகளோடு வளர்த்தால் என்ன? தகப்பனைக் காட்டிலும், குழந்தைகளை மிகப் பண்போடு வளர்ப்பாள் ஒரு தாய். தன் குழந்தையை பிரிந்து அவளால் இல்லறத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை; வேலையிலும் அக்கறை இல்லாமல் உள்ளாள்.
படித்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், எதில் முன்னேறி உள்ளோம் சொல்லுங்கள்? நுனிநாக்கு ஆங்கிலம், தலை அலங்காரம் (சில சமயம் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது!) தோளை குலுக்கி கொள்வது, இதில் தான் முன்னேறியுள்ளோம்… ஆனால், பெண்ணை சந்தேகப்படுவது, கொடுமைப்படுத்துவது, ஆதிக்கம் செலுத்துவது இதெல்லாம் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் மாறவில்லை…
— என எழுதி இருக்கிறார்… பெண்ணாய் பிறந்து விட்டால், எங்கெங்கிருந்தெல்லாம்… எப்படி, எப்படி எல்லாம் துன்பம் சூழ்கிறது பார்த்தீர்களா?

ARTICLE SOURCE: DINAMALAR

திண்ணை 10.4.2011

நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. சிறையில், முன்னும், பின்னும் நடந்து கொண்டிருந்தேன்; பிறகு, கொஞ்சம் நேரம் படித்தேன். எனினும், என் கண்கள் களைப்பாக இருந்தன. ஆனால், தூக்கம் இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டுதான் இருந்தது. கண்களை மூடிப் படுக்கையில், நம்பிக்கையுடன் விழுந்தேன்; ஆனால், அதிர்ஷ்டமில்லை. பனி ரெண்டு, ஒன்று, இரண்டு, மூன்று மணியாகியும் நான் நேரத்தை எண்ணிக் கொண்டு உருண்டு, புரண்டு கொண்டிருந்தேன். கடைசியில், மூன்று மணியானவுடன் நான் தூக்கத்தில் விழுந்தேன். நேற்று மாலையில் சிறை வாழ்க்கை பற்றி எனக்கு ஒரு விசித்திரக் கனவு வந்தது.

நான், ஒரு தனிச் சிறையில் இருக்கிறேன். நிற்பதற்கு எவ்வளவு உயரமோ, கைகளை நீட்டுவதற்கு எவ்வளவு அகலமோ அந்த அளவுதான் சிறை இருந்தது. கூரை ஒழுகி, மழை மிகப் பெரிய துளிகளாக என் மீது விழுந்தது. மழைத் துளிகள் என்னைத் தொட்டவுடன், அவை காசுகளாக மாறி, என் தலையைத் தாக்குகிறது. வெளியே போவதற்கு அழு கிறேன்; கதவு பூட்டியிருக்கிறது; தப்பிக்க வழி இல்லை. மழைத் துளிகள் தொடர்ச்சியாக விழுந்து, என் தலையில் துளையிட்டு விட்டன. வலி பயங்கரமாக இருந்தது. நான் சாக வேண்டியதுதான் என்று உணர்ந்த போது, சட்டென்று எழுந்தேன். நான் சிறை அறையில் உள்ள படுக்கையில் இருந்தேன். வெளியே மழை பெய்து கொண் டிருந்தது. ஒழுகும் கூரையிலிருந்து என் நெற்றியில் பெரிய நீர்த்துளிகள் விழுந்தன.

இந்தக் கனவுக்குப் பின் என்னால் உறங்க முடியவில்லை. நான் வெறுமனே படுத்துக் கிடந்து, விடியலுக்காகக் காத்திருந்தேன். விசில் சப்தம், கேட்டது. இது, கதவு திறப்பதற்கான நேரம்.
சிறையும் தனக்கேயுரிய, நகைச்சுவைகளை வைத்திருக்கிறது. நேற்று, சிறை மேட்ரன் (பெண் வார்டன்) என்னிடம் வந்தாள். “ஒவ்வொரு காலையும் உங்கள் அறையின் கதவைத் திறக்கும் போது, உங்களைத் தொந்தரவு செய்யாமலிருக்க முயற்சிப்பேன். ஏனெனில், இரவுகளில் நீங்கள் நன்றாகத் தூங்குவதில்லை என்று தெரியும். இரவு படுக்கையிலேயே கைதி இறந்து போயிருந்தால், எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அதனால்தான், “சிறை விதிகளின்படி நான் வந்து உங்களை எழுப்பி விடுகிறேன்…” என்றாள். நான் மோசமான மரணத்தை எதிர்ப்பார்த் திருக்கும் போது, தூக்கத்தில் இறக்கலாம் என்பது சந்தோஷமான விஷயம் தானே!

ஜவஹர்லால் நேருவின் சகோதரி, விஜயலட்சுமி பண்டிட் எழுதிய, “எனது சிறை நாட்கள்” நூலில்.

***

நான் இந்த (அமெரிக்க) நாட்டிற்கு வந்து, சிகாகோ பொருட்காட்சி சாலையை சுற்றிப் பார்த்தபடியே போய்க் கொண்டிருந்த போது, பின்புறமிருந்து ஒருவன் என் தலைப் பாகையைப் பிடித்து இழுத்தான்; நான் திரும்பிப் பார்த்தேன். அவன் நன்றாக உடை உடுத்தி, நல்ல மனிதன் போலவே இருந்தான். அவனிடம் பேசத் தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று கண்டபோது, அவன் குறுகிப் போனான். மற்றொருமுறை அதே பொருட் காட்சி சாலையில் வேறொரு வருடன் என்னைப் பிடித்துத் தள்ளி னான். “ஏன் இப்படி செய்கிறாய்?” என்று நான் கேட்டேன். நான் கேட்டவுடனே அவனும், வெட்கிப் போய் சற்று தடுமாற்றத் துடன், “ஏன் நீ இப்படி விசித்திரமாக உடை உடுத்தி இருக்கிறாய்?” என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் கேட்டான்.
இவர்களின் கனிவெல்லாம் சொந்த மொழி, சொந்த உடை என்ற எல்லைக்குள் நின்று விடுகின்றன. இந்த எண்ணம் அவர்களிடம் மனி தாபிமானத்தையே வற்றச் செய்து விடுகிறது. தன்னைப் போல் நான் ஏன் உடை உடுத்தவில்லை என்று கேட்டு, என் உடை காரணமாக என்னைக் கேவலப்படுத்த முயன் றானே ஒருவன், அவன் ஒரு நல்ல மனிதனாக, நல்ல தந்தையாக, நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால், மாறுபட்ட உடையில் ஒருவனைக் கண்டதும், அவனது இயல்பிலுள்ள கனிவு மறைந்து விடுகிறது.
புதியவர்கள் எல்லா நாடுகளிலும் ஏமாற்றப் படுகின்றனர். ஏனென்றால், அங்கே தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது அவர்களுக்கு தெரியாது.

அமெரிக்க நாட்டு (சிகாகோ) சொற்பொழிவில் விவேகானந்தர்.

பார்த்தது..கேட்டது..படித்தது 10.04.2011

கேரள மாநிலம், கோட்டயம் செல்வதற்காக திருவனந்தபுரம் மெயிலில் அமர்ந்து இருந்தோம்; இடம், சென்னை சென்ட்ரல் station.என்னையும், லென்ஸ் மாமாவையும் தவிர, குப்பண்ணாவும், அன்வர் பாயும் உண்டு.
பயண திட்டம் தயாராகும் போதே, “பஸ்ட் கிளாஸ், டிக்கெட் எடுத்தால் தான் வருவேன்…” எனக் கூறி விட்டார் அன்வர் பாய். செலவை பொருட்படுத்தாமல், அதே போல செய்திருந்தார் மாமா!

ரயில் கிளம்பி தட, தடவென ஓட ஆரம்பித்திருந்தது… “ரயிலில் சென்ற ஒரு பண்ணையாரின் கதை சொல்லட்டுமா?” எனக் கேட்டார் குப்பண்ணா; அனைவரும் தலையாட்டினோம்…

வெள்ளைக்காரன், அப்போது தான் நம் நாட்டில் ரயில் விடத் தொடங்கி இருந்த காலம். ஒரு பண்ணையார், முதன்முதலாக பக்கத்து டவுனுக்கு மாட்டு வண்டியில் போய் விட்டு, திரும்பி வரும் போது ரயிலில் பயணம் செய்தார்.
பண்ணையாருக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு. வெற்றிலை போட்டுக் குதப்பி, இரண்டு விரல்களை உதட்டின் குறுக்கே வைத்து, “சர்”ரென்று வெற்றிலை எச்சிலை ஜன்னல் பக்கமாகத் துப்பினார்.

ஜன்னலில் கண்ணாடி உண்டு… அது, இறக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி எல்லாம் அவருக்குத் தெரியவில்லை; முதல் பயணமாயிற்றே… எச்சில் அதில் பட்டு, எதிரே இருந்தவர் முகமெல்லாம் தெறித்தது. ஒருவன், பண்ணையாரை ஓங்கி அறைந்து விட்டான்.
கிராமத்துக்கு வந்த பண்ணையாரிடம், “ரயில் பயணம் எப்படி?” என்று கேட்டனர். “நன்றாகத்தான் இருந்தது… வெற்றிலை எச்சிலைத் துப்பினால் மட்டும் திருப்பித் துப்பி, அடிக்கின்றனர்!” என்றாரே பார்க்கலாம் பண்ணையார் எனக் கூறிச் சிரித்தார் குப்பண்ணா.
“ரயில் பற்றி நான் ஒரு தகவல் சொல்றேன் பா…” என்ற அன்வர் பாய் தொடர்ந்தார்…  
“இந்தியாவின் முதல் ரயில்வே போக்குவரத்து எங்கிருந்து, எங்கு விடப்பட்டது என்று கேட்டால், மும்பையிலிருந்து, தானாவிற்கு என்று உடனே சொல்லி விடுவீர்கள். இரண்டாவது ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா? சென்னை வியாசர்பாடியிலிருந்து, வாலாஜா ரோட்டிற்கு… 21 கி.மீ., தூரம் பாதை அமைக்கப்பட்டு ரயில் விடப்பட்டது…” என்றார்.
“ரயில் கதை கிடக்கட்டும்… சுவாரசியமாக ஏதாவது சொல்லும்…” என குப்பண்ணாவிடம் கேட்டபடியே, உ.பா.,வை வாயில் கவிழ்த்துக் கொண்டார் லென்ஸ் மாமா…
“இதோ…” என்றபடியே, தாம் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையை வெளியே சென்று துப்பிவிட்டு வந்த குப்பண்ணா ஆரம்பித்தார்…

புதுவையில், கவிஞர் பாரதிதாசன் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டுக்காரர், கவிஞரிடம் பகை கொண்டிருந்தார். அவரால், கவிஞருக்குச் சில இடையூறுகள் நேர்ந்தன. பக்கத்து வீட்டுக்கு சில அடியாட்கள் அடிக்கடி வந்து போவர்.
இவைகளுக்கெல்லாம் அஞ்சுபவரா கவிஞர்! அவர் குடியிருந்த வீட்டிற்கெதிரில் ஒரு காலி மனை இருந்தது. அதன் உரிமையாளரை அணுகி, அந்த இடத்திற்கு வாடகை பேசிக் கொண்டார். இடத்தை சுத்தப்படுத்தச் செய்தார். சிலம்பப் பயிற்சி செய்யும் திடலாக அதை மாற்றினார். இளைஞர் சிலரைக் கூட்டி வந்து, அங்கு காலையும், மாலையும் பயிற்சி செய்ய வைத்தார். கோல் சண்டை, குத்துச் சண்டை முதலிய விளையாட்டுக்கள் அங்கு நடைபெற்றன.

இதைக் கண்டு அஞ்சிய கவிஞரின் பக்கத்து வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டாராம். முள்ளை முள்ளால் எடுத்தத் திறம் இதுவன்றோ?
அக்காலத்தில் கவிஞர் அடிக்கடி தம் வீட்டை மாற்றுவார். கவிஞர் கூனிச்சம்பட்டியில் பணியில் இருந்த சமயம் அது. அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரரும் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.

ஒருநாள் விடியற்காலை, ஐந்து மணியளவில் அந்த வீட்டுத் தெருக்குறட்டில் தப்பு, சேமக்கலம் ஒலிக்கலாயிற்று; இவை இரண்டும், இறந்தவர் வீட்டில் பயன்படுத்தும் வாத்தியங்கள்.

வீட்டுக்காரர் (கவிஞரின் பகைவர்) கதவைத் திறந்து பார்த்த போது ஒருவர் மேற்சொன்ன எறிமணியை (சேமக்கலம்) அடித்துக் கொண்டிருக்கக் கண்டார். அடிப்பதை நிறுத்தச் சொல்லி, “என்ன சேதி?” என்று கேட்டார். அதற்கு அவர், “இந்த வீட்டில் யாரோ இறந்து விட்டதாகச் சொல்லி, முன் பணம் கொடுத்து, காலை, ஐந்து மணிக்கு வந்து அடிக்கச் சொல்லி ஒருவர் சொன்னார்!” என்று பதிலளித்தார்.

“சொன்னவன் எவன்?”

“யாரோ ஒருவர் வந்து சொன்னார்…”

“இந்த வீட்டில் இல்லை; போய் விடு!” என்று கூறி, விரட்டி விட்டார்.

தப்பு – சேமக்கலம் அடிக்கக் கேட்டு, தெருவில் பலர் விழித்துக் கொண்டனர். அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் விசாரிக்க வந்து விட்டனர். அவர்களுக்கு பதில் சொல்வதே பக்கத்து வீட்டுக்காரருக்கு பெரிய வேலையாகி விட்டது.

கவிஞர் இந்த ஏற்பாடுகளை செய்து விட்டு, விடியலிலேயே கிளம்பி விட்டார். பக்கத்து வீட்டுக்காரர், “கவிஞர் தாம் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்…” என்று முடிவு செய்து கொண்டார்.

இதனால், கவிஞரைப் பார்க்கும் போதெல்லாம் வசைபாடலானார். 10 நாட்களுக்குப் பிறகு, ஒருநாள், பகல், 12 மணி அளவில், அக்கா பரதேசி மடத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பரதேசிகள் வந்து, பக்கத்து வீட்டில் நுழைந்தனர். அந்த வீட்டுக்காரர், “என்ன?” என்று கேட்க, “இன்று புண்யாவசனம் என்றும், ஏழைகளுக்கு உணவளிக்கப்படும் என்றும், சரியாக 12 மணிக்கு பகல் உணவிற்காக இந்த முகவரிக்கு வர வேண்டும் என்றும் யாரோ மடத்தில் வந்து சொன்னார்கள்…  
அதனால்,வந்தோம்!” என்றனர்.

“இங்கு புண்ணியாவசனமும் இல்லை; ஒரு மண்ணுமில்லை. போங்கடா வெளியே!” என்று அவர் பரதேசிகளைத் துரத்த, அவர்கள் தெருவில் நின்று வசை பொழிந்து சென்றனர்.

இந்த உத்திகளெல்லாம் பாவேந்தருக்கே உரியன. பகைவர்களை அடக்க அவர் செய்த தந்திரங்கள் என்று பாவலர் மணிசித்தன், “பாவேந்தருடன் பயின்ற நாட்கள்” என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்…” என முடித்தார்.

மாமா, 240 மி.லி., முடித்து இருந்தார்… “பசிக்கிறதே…” என அன்வர் பாய் கூறவும், மல்லிகைப் பூ போன்ற இட்லியை எடுத்து வைத்தார் லென்ஸ் மாமா… அவர் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தார். இட்லியின் மீது பொடி தடவப்பட்டு இருந்தது. அத்துடன் சிதம்பரம் கொத்சு, காய்ந்த மிளகாய், தேங்காய் இட்டு அரைக்கப்பட்ட வழிச் சட்டினி… ஒரு பிடிபிடித்து, தூங்கி எழுந்த போது எர்ணாகுளம் டவுன் stationனில் வண்டி நின்று கொண்டிருந்தது.
படுக்கையை எடுத்துச் செல்ல வந்த அட்டண்டர், முகம் துடைக்கக் கொடுத்த சிறிய டவல் நான்கில் ஒன்றைக் காணோம் என தொணத்திக் கொண்டிருந்தார்.
“சரி… அதற்கு பைன் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்… கொடுத்து விடுகிறோம்…” என்றதும், டி.டி.,யை அழைத்து வந்தார். அவர், “சார்… அந்த டவலின் விலை 24 ரூபாய்… இவரிடமே கொடுத்து, ஒரு கடிதமும் எழுதிக் கொடுத்து விடுங்கள்… இல்லை என்றால் இவர் சம்பளத்தில் பிடித்து விடுவர்…” என்றார்.
பணத்தைக் கொடுத்த பின், அந்த அட்டண்டர், “மீண்டும் தேடிப் பார்க்கிறேன்…” எனச் சொல்லி, மேல் பர்த்தில் தேட, அங்கிருந்த பள்ளத்தில் டவல் கிடைத்தது.
“தப்பா நினைக்காதீங்க சார்… எவ்வளவு பணம் படைத்தவராக இருந்தாலும், சிலர், இது போன்ற சின்னச் சின்ன பொருட்களை எடுத்துச் சென்று விடுவர்… இப்படித்தான் பாருங்கள்… நடிகை ஒருவருடன் வரும் உதவியாளப் பெண், மூன்று முறை இதே வேலையைச் செய்து விட்டார்… நான்காம் முறை பிடித்து விட்டேன். தன் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தவர், “டிக்கெட் காசில் இதுவும் அடக்கம் என நினைத்து விட்டேன்…” என்றாரே பார்க்கணும்…” என்றார் மலையாளம் கலந்த தமிழில்!
— ஒருவர் முகத்தை ஒருவர் குசும்பாகப் பார்த்துக்கொண்டோம்!

ARTICLE SOURCE: DINAMALAR