யகூவை பிங்க் முந்திவிட்டதா ?

Bing vs Yahoo

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகபடுத்தியுல பிங்க் தேடு பொறி ,  யாகூவை அமெரிக்காவிலும் , உலக அளவிலும் முந்திவிட்டதாக இணைய போக்குவரத்துக்கு கண்காணிப்பு நிறுவனமான ஸ்டாட்ஸ் கௌந்தெர்(StatsCounter) தெரிவித்துள்ளது . பிங்க் , அமெரிக்காவில்  16.28% பெற்று 10.22% பெற்ற யாகூவை வீழ்த்தியுள்ளது .அதேபோல் உலகளவில் 5.62% பெற்று ,  5.13% பெற்ற யாகூவை முந்தியுள்ளது . எனினும் இந்த நிலைமை பிங்க் பற்றிய கிளர்ச்சி அடங்கியவுடன் , மாறிவிடும் என்ற தகவலையும் ஸ்டாட்ஸ் கௌந்தெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் , ” இன்னும் இரண்டு ஆண்டுகளில் ,   உலகளவில் சிறந்த  தேடுபொறி பட்டியலில் , பிங்க் கூகிள் க்கு அடுத்து  இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் ” என்று மைக்ரோசாப்ட் இன் CEO ஸ்டீவ் பால்மெர் விரும்புவதாக , குறிப்பிட்டுள்ளது . எனினும் இந்த போட்டியில் கூகிள் தனது நிலையை தக்கவைத்து கொண்டுள்ளது .

முன்னதாக  , மைக்ரோசாப்ட் நிறுவனம் யாகூவை  விலைக்கு வாங்க முயன்று பின் தோல்வியுற்றது குறுப்பிடத்தக்கது  . இந்நிலையில் அதைவிட குறைந்த விலையில் பிங்கை அறிமுகப்படுத்தி மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்காலிக வெற்றியை பெற்றுள்ளது . இந்த வெற்றியை பிங்க் தக்கவைத்துகொள்ளுமா  ? பதில் காலத்தின் கையில்!

மேலும் படிக்க :

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s