மனுஷனா பாருங்க!


சமீபத்தில், ஒரு நாள், பகல் பதினொரு மணி அளவில், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள கல் பலகையில் அமர்ந்திருந்தேன். சிறிது தள்ளி ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர், சோகத்தோடு உட்கார்ந்திருந்தார். அப்போது, இரண்டு கால்களும் ஊனமான ஒருவன், கைகளை ஊன்றித் தவழ்ந்தவாறு அவரிடம் வந்து காசு கேட்டான். அதற்கு அவர்,  “தம்பி… எங்கிட்ட காசு இல்லை. என் பழைய நண்பரைப் பார்ப்பதற்கு இங்கு வந்தேன். பஸ்சை விட்டு இறங்கும் போது, கூட்டத்தில் யாரோ என் பர்சைத் திருடிட்டாங்க. அதில், நண்பரோட வீட்டு முகவரி, மொபைல் நம்பர் இருந்தது. இப்ப எல்லாமே போச்சு. திரும்ப ஊருக்குப் போகக் கூட பணமில்லை;  இங்கே தெரிஞ்சவங்களும் இல்லை.  இருபது ரூபா இருந்தாக் கூடப் போதும்… ஊருக்குப் போயிடுவேன்!’ என்று கவலையோடு சொன்னார்.அவர் சொன்னதைக் கேட்ட அந்த பிச்சைக்காரன், என்னைப் பார்த்தான். நான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டதால், பஸ்சுக்காக 5 ரூபாய் மட்டுமே வைத்திருந்தேன்.  அதனால், கையை விரித்தேன். அவன் எதுவும் பேசாமல், திரும்பி கைகளை ஊன்றி வேகமாகத் தவழ்ந்து சென்றான்.ஐந்து நிமிடம் சென்றதும் திரும்பவும் வந்தான். அவன் கை விரல் இடுக்கில், ரெண்டு பத்து ரூபாய் நோட்டு இருந்தது. நோட்டை, அந்த பெரியவரிடம் நீட்டியபடியே, “ஐயா… இந்தாங்க இருபது ரூபா. வாங்கிக்கிட்டு நீங்க ஊருக்குப் கிளம்புங்க…’  என்றான். அவர் பணத்தை வாங்காமல், அவனை வியப்புடன் பார்த்தார்; நானும் பார்த்தேன். “என்னய்யா யோசிக்கிறீங்க… மனிதனுக்கு மனிதன் செய்யும் சின்ன உதவிதான் இது. ஆனா, நீங்க என்னை மனுஷனா நினைக்கல. ஒரு நொண்டி பிச்சைக்காரரிடம் பணம் வாங்குவதை அவமானமா நினைக்கிறீங்க. என்னையும் மனுஷனா நினைங்க. எனக்கும் மனசு இருக்கு, மனசாட்சி இருக்கு!’ என்றான். “தம்பி… அப்படியெல்லாம் நினைக்கல. உன் அன்பை பார்த்து அசந்திட்டேன்!’  என்றவர், அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டார். “நாளைக்கே உன்னை வந்து பார்க்கிறேன்…’ என்று  சொல்லிவிட்டுப் புறப்பட்டார். மனித நேயம் என்பது, நல்ல உள்ளங்களில் மட்டுமே வாழ்கிறது என்று கேள்விப்பட்டிருக்கேன். அப்படி ஓர் உயர்ந்த உள்ளத்தை அந்தப் பிச்சைக்காரரிடம் கண்டேன்.

எழுதியவர் ஆ.சந்திரன், கன்னிவாடி.

தினமலர் நாளிதழுக்காக

article source: Dinamalar

picture source: wikipedia

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s