தமிழ் பதிவுலகில் எனது பயணம் இனிதே ஆரம்பம்

பல மாதங்களாக தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவுதான் இந்த பதிவு. இந்த ஆவலுக்கு வித்திட்டவர்கள் அருமை நண்பர்கள் திரு.பிரபாகரன் மற்றும் திரு.பாரி.

இனி எனது blogஇன் தமிழ் பதிவுகள் மூலமாக நான் இந்த சமுதாயதில் கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை, உணருபவை ஆகிய அனைத்தையும் இந்த உலகுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வளவு நாட்களாக தமிழில் பதிவெழுதாமல் இருந்ததிற்கு காரணங்கள் பல உள்ளன.

• “தமிழில் type செய்ய வேண்டுமே” என்ற சோம்பேறித்தனம்.

• “ஆங்கில புலமையை சிறிதளவு வளர்த்துக்கொள்ள வேண்டுமே” என்ற எண்ணம்.

• “கணினி சார்ந்த உலக செய்திகளை ஆங்கிலத்தில் மட்டுமே கூறினால் போதும்” என்ற குறுகிய மனப்பான்மை

இனி இந்த தடைகளை மீறி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

எனது இந்த பதிவை படிக்க வரும் அருமை நண்பர்களுக்கு எனது சிறு குறைகளை பொறுத்துக்கொள்ள வெண்டுகிறேன்.

• ஒற்று இல்லாமல்/சரியாக இல்லாமல் எழுதுவது.

• கோர்வையாக எழுதாதது

• சில இடங்களில் சுவையைக் கூட்ட ஆங்கில சொற்கள் பயன்படுத்துவது.

ஆகிய குறைகள் இதில் அடங்கும்.

நான் பள்ளி பருவத்தில் இருந்தே இருந்தே மிகவும் ரசித்து படித்து வருகின்ற தினமலர்-வாரமலர் பகுதிகளை as it is copy செய்து எனது blogஇல் இதுவரை paste செய்து வந்தேன். இதற்கு காரணம் “நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெற வேண்டும்” என்பதே.

சிறு வயதில் இருந்தே எனையறியாமல் எனக்குள் ஒரு பழக்கம் உண்டு.   எனது தோல்விகளில் இருந்து மற்றவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த குணம் எனக்குள் ஏன் வந்தது, எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. இந்த குணத்தாலேயே பல நண்பர்களுக்கு “குடும்ப நண்பனாக”(Family Friend) ஆனேன். இதே குணத்தால் இந்த பதிவுலகின் மூலமாக உங்களுக்கும் ஒரு குடும்ப நண்பனாக மாறுவேன் என்ற எண்ணத்தில் இந்த தமிழ் பதிவுலகில் காலெடுத்து வைக்கிறேன்.

 

Obtaining Node Position and Energy Dynamically in NS2.34

To read this article in Scribd go <here>

For an alternative method to obtain a nodes position, go <here>

Happy to meet you in another interesting task in NS2!

This time we will “dynamically” calculate a nodes position and remaining energy.This post is based on the valuable tips mentioned <here>  by Elmurod Talipov.
Now to the task…
I will be modifying the sample script simple-wireless.tcl found at ~/ns-allinone-2.34/ns-2.34/tcl/ex and all my tasks in ns2 would be based on AODV protocol.

1. In simple-wireless.tcl, change the routing protocol to AODV, enable Energy model and set the initial energy value.

2. In the node configuration set the EnergyModel, Initial Energy value, power spent in receiving mode,transmit mode,idle mode and sleep mode.

3. Now we will move to the backend code(c++). Our edits would be performed only in aodv.cc and aodv.h.

4. In aodv.h,first include the following header file that contains the procedures/functions needed to access node postion,energy and several other functions.

#include <mobilenode.h>
You will find class AODV,  something like the one shown below.

5. In that, declare the following variables in “protected” scope.

With that, no more work to be done in aodv.h. What we have actually done here is to declare the variables that we will using in aodv.cc to record a nodes position and energy.

6. In aodv.cc, we will initialize the variables that we have just declared in aodv.h. This we do in the AODV “constructor“(invoked only once during node creation).

7. Next, we include the code to access the functions in mobilenode.h, that fetch the nodes current position and energy.

I have included that code AODV::forward() function, so that the nodes position and energy are printed each time it forwards a packet. Where and When you want them to be printed is your choice. Alternatively, you may have the code included in the function of your choice and have the output redirected to a file.

8. Thats all! All we have to do now is to run simple-wireless.tcl
$ns simple-wireless.tcl
and the output would be something like this:


If you find any discrepancies in this post, please feel free to drop me a mail at micman.manoj@gmail.com. By doing so, You would be saving the valuable time of many researchers.

This article is licensed under GNU GENERAL PUBLIC LICENSE

“உலகம் சுற்றிய வாலிபன்” Dr.பிலோ இருதயநாத்

எனது தாத்தா Dr.பிலோ இருதயநாத் அவர்களுக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன்!

source of the following article: http://www.visvacomplex.com/philo_irudhayanath.html

பிலோ இருதயநாத் என்பவர் தமிழர்களிலேயே தனித்தன்மை வாய்ந்ததோர் எழுத்தாளர். அவர் போல அன்றும் வேறு யாரும் இருந்ததில்லை. இதுவரைக்கும் யாரும் இருக்கவும் இல்லை என்று தைரியமாகக் கூறலாம்.
அவரைப் பற்றி சில நூல்களிலிருந்து திரட்டி, கீழே எழுதியுள்ளேன்.

காடுமலைகளிலெல்லாம் அலைந்து ஆதிவாசிகள், மலைக்குடி மக்கள் முதலியவர்களைப் பற்றி எளிய தமிழில் புரியும்வண்ணம் விளக்கமாக எழுதுவார். ஆரம்பத்தில் அவர் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராகத்தான் விளங்கினார். பின்னரே அவர் மானிடவியலில் புகுந்தார். ஐம்பதாண்டுகளாகத் தொடர்ந்து பல சுற்றுப் பயணங்களைச் செய்து பல மாதிரியான பழங்குடி மக்களைச் சந்தித்து பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.

ஆனந்தவிகடனில் அறுபது வருடங்களுக்கு முன்னர் அவருடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவந்ததுண்டு.
அவர் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டே, நேரம் கிடைத்தபோதெல்லாம் இந்த ஆராய்ச்சியைச் செய்துகொண்டே இருந்திருக்கிறார்.

1916-ஆம் ஆண்டில் பிறந்தவர். காடுமேடுகளிலெல்லாம் அலைந்து, பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஒரே anthroplogist இந்தியர் இவர் ஒருவர்தான். 3000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அவருடைய கட்டுரைகளைக் கிட்டத்தட்ட 70 இதழ்கள் தாங்கிவந்துள்ளன. 63 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றுள் 37 மட்டுமே வெளிவந்துள்ளன.

மீதியுள்ளவை அப்படியே கையெழுத்துப் பிரதிகளாகத் தூங்கிக்கொண்டு இருந்தன. இதனை ஆண்டுகள் கழித்து இன்னும் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை.

மானிடவியலில் ஆதிவாசிகள் மலைக்குடியினரைப் பற்றி மட்டுமே இவர் ஆராய்ச்சி செய்துள்ளார் என்று முடிவு கட்டிவிடக்கூடாது.பல்லவ மரபும் திப்பு சுல்த்தானின் வழியினரும் இன்றும் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்.

மனிதர்களைப் பற்றி மட்டுமே தம்முடைய ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்துக் கொள்ளவில்லை. வேடன் தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச்செய்து promote செய்தவரும் இவர்தான்.

பாரத மத்திய அரசு, தமிழக அரசு, யூனெஸ்கோ ஆகியவற்றின் விருதுகளைப் பெற்றவர்.விக்கிரமாதித்தனைப்போலவே இவரும் காடாறு மாதம், நாடாறு மாதம் என்று வாழ்க்கையைக் கழித்தவர்.

காட்டில் உள்ள அபாயங்களைக் கண்டு அஞ்சாமலும் அவற்றின் தன்மைகளை நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப நடந்துகொள்வதில் நிபுணர். காட்டுவாசிகளின் மனோதர்மத்தையும் உளவியலையும் அறிந்து, அவர்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவும் நம்பிக்கைகளுக்கு ஏற்பவும் தெரிந்து நடந்துகொள்ளும் பக்குவமும் அவருக்கு இருந்தது. அத்தனைத் தகவல்களையும் சேகரித்து அவற்றைத் தொகுத்து, ரசிக்கக்கூடிய வகையில் எழுதிவெளியிட ஓர் அலாதியான  நுண்ணறிவும் தனித்தன்மை பொருந்திய லாவமும் திறமையும் வேண்டும். சரடுகள் கலக்காமல் திரட்டிய தகவல்களை மட்டுமே உண்மையுடன் எழுதும்  மன உரமும் வேண்டும்.

இவையெல்லாமே இருதயநாத்திடம் இருந்தன.அவர் செய்த அந்த ஆராய்ச்சியை அவர் ஒரு கர்மயோகமாகத்தான் செய்துவந்தார். அவரைத் தேடிவந்த புகழும் விருதுகளும் அவையாகவே அவரைத் தேடிவந்தவை. அவர் அவற்றைத் தேடி அலையவுமில்லை. அவற்றுக்காக அந்த ஆய்வுகளைச் செய்யவும் இல்லை.
அவருடைய கர்மயோகத்தைப் பற்றி அவரே சொல்லக் கேட்போம்:

தும்பிகள் பூக்கள்தோறும் பறந்து சென்று தேனைச் சேகரித்து வைத்தால் அதைக் காடர்கள் எடுத்துக் குடித்து மகிழ்வதுபோல, நானும் பல காடுகளுக்குச் சென்று, பசி தாகம் பாராமலும், காட்டு வாழ் மக்களோடு கூழ் குடித்தும், அதனால் சிலபொழுது எனக்கு நேர்ந்த வயிற்று உளைச்சலையும் – பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சுற்றிப் பலவகை மக்களிடமிருந்து பல வியக்கத்தக்க பழக்க வழக்கங்களும் – சிறந்த பண்புகளும் பற்றிய தகவல்களாகிய தேனைச் சேகரித்துக் கொண்டு வந்து நிறைத்த பல கட்டுரைகள்……...”

“.……அந்தக்காலத்தில் ஆங்கில அரசினரும் பல பாதிரிமார்களும் நவீன நாகரிகம் அறியாமல் மலையிலும், காடுகளிலும் மறைந்து வாழும்  மக்கள் சிலரின் சமூகத்தை ஆராய்ந்ததுடன், அவர்களிடம் சீர்திருத்தம் செய்யப் புகுந்தார்கள். அங்ஙனம் புகுந்தவர்கள் தாங்கள் தெரிந்துகொண்ட சில செய்திகளை ஓரளவுக்கு ஆங்கிலத்தில் எழுதினார்கள். ஆனால் அவர்கள் எழுதியவை சங்ககால நூல்களையும் காடர்களின் மொழிகளையும் தெரிந்துகொண்டு எழுதியவையல்ல.

நான் ‘மானிட இயல் துறை’ பயின்று பட்டம் பெற்றவனும் அல்லன். ஆயினும் பழைய காட்டுமக்களைப் பற்றியும் பழங்குடிகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமே, சில காடுகளுக்குச் செல்லத் தொடங்கினேன். பஸ் வசதியும், வண்டி வசதியும், இன்று இருப்பதுபோல, அன்று இல்லை. நடந்தும், வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரியிலும், யானையின் சாணத்தைச் சேகரிக்கக் காடுகளுக்குச் செல்லும் லாரியிலும் மாட்டுவண்டியிலும் ஏறிச் சென்றேன்.

ஓரளவுக்கு பொதுமக்கள் யாவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற கருத்துடன், ஒவ்வோர் இனத்தாரைப் பற்றியும் வரலாற்றுச் சான்றுகள் கொடுத்து, எம்மதத்தினருக்கும் மனம் புண்படாத வண்ணம் நடுநிலையோடு எழுத விரும்பினேன். எனவே இயன்ற வரையில் ஒவ்வோர் இடத்துக்கும் நேரில் பிரயாணம் செய்து, ஒருமுறைக்கு ஒன்பதுமுறை அந்த மக்களைக் கேட்டுச் சந்தேகங்களை நீக்கிக் கொண்ட பின்னரே, சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதிய கட்டுரைகள்…..

உலகத்தில் மொழியில்லையென்றால் நாகரிகமே தோன்றியிருக்காது. ஆகையால் காடர்களின் நாகரிகத்தைப் பற்றிய முழு விபரங்களையும் அறிய வேண்டி அவர்களுடைய மொழிகளைப் பற்றியும் ஏதோ சிறிது தெரிந்து
கொண்டேன்.  அவர்களுடைய உணவுகளை உண்டு பழகிக்கொண்டேன். காட்டில் வாழும் மக்களிடையே வழங்கும் மொழிகள் எப்படித் தோன்றின என்று அறிய நானும் அவற்றுள் சில மொழிகளைக் கற்றும் எழுதியும் வந்துள்ளேன்.

மேலும் மேலும் எனக்கு ஆராய்ச்சித்துறையில் ஊக்கமளித்த மறைந்த உயர்திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுக்கும் உயர்திரு சாண்டில்யன் அவர்களுக்கும்….என் நன்றி கலந்த வணக்கம்“.

அவருடைய நூல்களில் பல இடங்களில் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை போன்ற சங்க நூல்களிலிருந்து பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
ஓர் அரசின் அல்லது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையினர் எடுத்துச்செய்யவேண்டிய பெரும்பணியை, ஒரு தனி மனிதனாய் நின்று, பொருட்செலவையும், பிரயாசையையும் களைப்பையும் தவிப்பையும், கண்விழிப்பையும், உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் ‘முயற்சி திருவினையாக்கும்’,  ‘கருமமே கண்னாயினார்’ என்ற என்ற முதுமொழிகளுக்கேற்ப,  முயன்று முடித்தவர் பிலோ இருதயநாத்.

—-

நன்றி: திரு .ஜெயபாரதி

Adding a new module to NS2

Suppose you have three files, viz:

  • myfile.h
  • myfile.cc
  • myfile.tcl

and if you want to integrate these into your existing NS2 installation, just follow the procedure explained by Mr. Teerawat Issariyakul.

Download PPT on [Adding a new module to NS2] by Mr. Teerawat Issariyakul

For more such interesting tips and NS2 guidance, have a look at:

* Mr. Teerawat’s slides

* Mr. Teerawat’s blog