கண்ணுபடபோகுதையா

    

      மணிமேகலை பிரசுரத்தின் “கண் திருஷ்டிகளும் பரிகாரங்களும்” என்ற புத்தகத்தை சமீபத்தில் நான் படிக்க நேர்ந்தது. அதில் சில சுவாரசியமான செய்திகள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அவற்றை இப் பதிவின் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். நம்புவர்கள் நம்பலாம், நம்பாதவர்கள் இதன்  சுவாரசியம் கருதி தொடர்ந்து படிக்கலாம். 

     “திருஷ்டி” என்ற வட சொல்லுக்கு இணையான தமிழ் சொல் “பார்வை” என்பதாகும். ஒருவருடைய கண் பார்வையிலேயே அவருடைய நவரச  பாவங்களையும் உணர்த்த முடியும். கோபம், வெறுப்பு முதலியவற்றை ஒருவரது பார்வைகளிலேயே நாம் பார்த்திருப்போம் அல்லவா?      கூர்மையான ஒருவருடைய பார்வை நம் மீது படும் போது நமது உடலில் பல மாற்றங்கள்(நல்லதோ கெட்டதோ) ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளின் வீரியத்தை   குறைப்பதற்காகவே  பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. ஒரு பெண் தனது நெற்றியில் திலகம் இடுவதே கண் திருஷ்டியைக் குறைக்க ஒரு பரிகாரம் தான். இதில் எனக்கு நம்பிக்கை உண்டு. விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால், புருவத்திற்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி பார்வையை செலுத்தி mesmerism மூலமாக ஒருவரை வசியம் செய்ய முடியும். இதையே திரிஷ்டி  என்று நமது முன்னோர்களால் கூறப்பட்டது போலும்.

     உலக வரலாற்றிலும் “திரிஷ்டி” சில சுவாரசியமான இடங்களைப் பிடித்திருக்கிறது.ஹிட்லரின் ஸ்வஸ்திக்(swastik) சின்னமும் திருஷ்டியோடு சம்பந்தப்பட்டு இருந்ததாக ஜேர்மன் ஆராய்ச்சியாளர்களே கூறுகின்றனராம். வீட்டில் பல்லிகள் இருந்தால் திருஷ்டி பாதிப்பு வராது என்பது மலேசியா மக்களின் நம்பிக்கை. பிரிட்டன் மக்கள், தம் நாட்டில் குரங்குகள் அதிகம் இருந்தால் அது நாட்டிற்கும் தங்களுக்கும் தோஷம் ஏற்படாமல் இருக்கும் என்று நம்பினார்கள். ஒரு கட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தவுடன் மக்களிடையே பீதி பற்றிக்கொண்டது. இதை அறிந்த அன்றைய பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Churchill)  இரவோடு இரவாக வெளிநாடுகளிலிருந்து நிறைய குரங்குகளை இறக்குமதி செய்துள்ளார். 

    கண் திருஷ்டி மனிதர்களை மட்டுமல்ல, மற்ற உயிரினங்களையும், உயிரற்றவைகளையும்(நிலம்,பயிர்) பாதிக்கும்.

திருஷ்டி ஏற்படுத்தக் கூடிய கண்கள் என்று குறிப்பிடப்படுபவை:
* செவ்வரி படர்ந்த கண்கள் 
* நன்கு கறுத்து உருண்டு திரண்ட கண்கள் 
* பூனைக் கண்கள் 
* யானையின் கண்கள்  போன்று சிறுத்துச் சுருங்கிய கண்கள் 
மேலும், இந்த புத்தகத்தில் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு  மாதமும் ஏற்படும் திருஷ்டிகளும், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் திருஷ்டிகள், வெவ்வேறு தொழில்களுக்கான திருஷ்டிகள் முதலிய பல சுவாரசியமான செய்திகள் கூறப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் நேரம் கிடைக்கும் போது உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.


இந்திய பட்ஜெட்… உருவாக்க சுவாரசியங்கள்

மத்திய அரசின்  budget  நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சூடு இன்னும் தணியவில்லை. தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தை நோக்கி ஏராள சலுகைகள், குறிப்பாக ரயில்வே budgetல். சீனியர் citizen ஆகும் தகுதி 65 வயதில் இருந்து  60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களை very சீனியர் citizen என்ற புது categoryயில்  சேர்த்துள்ளார்கள். ஆண்களுக்கான வருமான வரி சலுகைக்கான உச்ச வரம்பு 1.80  லட்சமாகவும், பெண்களுக்கு 2.10 லட்சமாகவும் உயர்த்தபட்டுள்ளது.

I took the budget papers with me everywhere on Monday,even to the bathroom” : என்று  Finance Minister Pranab Mukherjee நகைத்துள்ளார்.

budget இன்  இது போன்ற அம்சங்களை காரசாரமாக அனைவரும் விவாதித்துக்  கொண்டு இருக்க, இந்த budget   உருவாகும் விதம் பற்றி யாரவது என்றாவது சிந்தித்து உண்டா? அங்க தாங்க சுவாரசியமே அடங்கி இருக்கு…
எப்படின்னு பார்க்கலாம் வாங்க…
பட்ஜெட் உருவாக்குவதற்கென்றே ஒரு குழு நியமிக்கப்படும். இந்த திட்ட கமிசன் Economic Affairs Departmentஇன்   ஒரு அங்கமானதாகும். மத்திய அரசின் நிதித்துறையே  பட்ஜெட் உருவாக்கத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். இதன் கீழ் செயல்படும் சிறு துறைகள் பட்ஜெட்’இன் குறிப்பிட்ட  அம்சங்களை தீர்மானிகின்றன.
Department of Expenditure செலவீனம் சார்ந்த அம்சங்களையும், Department of Economic Affairs வரியில்லா வருவாய் மற்றும் பற்றாக்குறை  சார்ந்த அம்சங்களையும், Department of Tax Revenue வரிகள் மூலம் வரும் வருவாய் சார்ந்த அம்சங்களையும் தீர்மானிக்கின்றன.
பட்ஜெட் செய்முறையில்(process) ஈடுபட்டுள்ள    அனைவரும் QUARANTINE என அழைக்கப்படும் இடத்தில் பலத்த பாதுகாப்போடு அடைத்து வைக்கப்படுவர். குறிப்பெடுப்பவர்  தொடங்கி, பட்ஜெட் உரை type செய்பவர் வரை தீவரமாக கண்காணிக்கப்படுவர். பட்ஜெட் செய்முறை முடியும் வரை இவர்களுக்கு வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் இருக்காது. அந்த இடத்தில் அனைத்து செல்போன்களும் jamm செய்யப்பட்டிருக்கும். பட்ஜெட் உருவாக்கப் பயன்படும் கணினிகள் அனைத்து பிணையங்களிளிருந்தும்(network) disconnect செய்யப்பட்டிருக்கும்.  பட்ஜெட் குழுவினருக்கு உணவு கூட பேப்பர் தட்டுகளில் தான் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் உண்டு முடித்தவுடன் அவை அனைத்தும் தீயில் எரிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் மட்டும் தேவையின் போது quarantine உள் சென்று நிலவரங்களை கண்காணித்து வர அனுமதிக்கப்படுவார்.
இவ்வளவு பாதுகாப்பிற்கு காரணம் பட்ஜெட் ரகசியங்கள் கடுகளவும் வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காகும். அப்படி கசிந்து விட்டால் ?    உதாரணமாக, பெட்ரோல் விலையை உயர்த்த அரசு திட்டம் இட்டிருக்கும் செய்தி கசிந்தால், பெட்ரோல் பங்க் காரர்கள் பெட்ரோலின் இருப்பை அதிகரித்து, அதை பதுக்கி வைக்க  ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த quarantineனில், சில சமயங்களில், பட்ஜெட்  குழுவினர் பல வாரக் கணக்கில் கூட இருக்கக்கூடும். இந்த quarantine வழக்கமாக நிதி அமைச்சகம் அமைந்திருக்கும் north block ‘இல்   தான் அமைந்திருக்கும். இங்கே தான் பட்ஜெட் குழுவினருக்கு தேவையான உணவு,உடை,படுக்கை உள்ளிட்ட அனைத்து தேவைகளும் செய்யப்பட்டிருக்கும். இவை எல்லாத்தையும் தாண்டி தான் பட்ஜெட் நாடாளுமன்றம் வந்து சேரும். பட்ஜெட் வெளியாகும் 10 நாட்களுக்கு முன் தான் முழு பட்ஜெட் documentஉம், நிதி அமைச்சர் உரையும் தயார் ஆகும்.

அடேங்கப்பா ஒரு பட்ஜெட் உருவாகுவதில  இவ்ளோ இருக்கா!!

தமிழ் பதிவுலகில் எனது பயணம் இனிதே ஆரம்பம்

பல மாதங்களாக தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவுதான் இந்த பதிவு. இந்த ஆவலுக்கு வித்திட்டவர்கள் அருமை நண்பர்கள் திரு.பிரபாகரன் மற்றும் திரு.பாரி.

இனி எனது blogஇன் தமிழ் பதிவுகள் மூலமாக நான் இந்த சமுதாயதில் கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை, உணருபவை ஆகிய அனைத்தையும் இந்த உலகுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வளவு நாட்களாக தமிழில் பதிவெழுதாமல் இருந்ததிற்கு காரணங்கள் பல உள்ளன.

• “தமிழில் type செய்ய வேண்டுமே” என்ற சோம்பேறித்தனம்.

• “ஆங்கில புலமையை சிறிதளவு வளர்த்துக்கொள்ள வேண்டுமே” என்ற எண்ணம்.

• “கணினி சார்ந்த உலக செய்திகளை ஆங்கிலத்தில் மட்டுமே கூறினால் போதும்” என்ற குறுகிய மனப்பான்மை

இனி இந்த தடைகளை மீறி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

எனது இந்த பதிவை படிக்க வரும் அருமை நண்பர்களுக்கு எனது சிறு குறைகளை பொறுத்துக்கொள்ள வெண்டுகிறேன்.

• ஒற்று இல்லாமல்/சரியாக இல்லாமல் எழுதுவது.

• கோர்வையாக எழுதாதது

• சில இடங்களில் சுவையைக் கூட்ட ஆங்கில சொற்கள் பயன்படுத்துவது.

ஆகிய குறைகள் இதில் அடங்கும்.

நான் பள்ளி பருவத்தில் இருந்தே இருந்தே மிகவும் ரசித்து படித்து வருகின்ற தினமலர்-வாரமலர் பகுதிகளை as it is copy செய்து எனது blogஇல் இதுவரை paste செய்து வந்தேன். இதற்கு காரணம் “நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெற வேண்டும்” என்பதே.

சிறு வயதில் இருந்தே எனையறியாமல் எனக்குள் ஒரு பழக்கம் உண்டு.   எனது தோல்விகளில் இருந்து மற்றவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த குணம் எனக்குள் ஏன் வந்தது, எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. இந்த குணத்தாலேயே பல நண்பர்களுக்கு “குடும்ப நண்பனாக”(Family Friend) ஆனேன். இதே குணத்தால் இந்த பதிவுலகின் மூலமாக உங்களுக்கும் ஒரு குடும்ப நண்பனாக மாறுவேன் என்ற எண்ணத்தில் இந்த தமிழ் பதிவுலகில் காலெடுத்து வைக்கிறேன்.