தமிழ் பதிவுலகில் எனது பயணம் இனிதே ஆரம்பம்

பல மாதங்களாக தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவுதான் இந்த பதிவு. இந்த ஆவலுக்கு வித்திட்டவர்கள் அருமை நண்பர்கள் திரு.பிரபாகரன் மற்றும் திரு.பாரி.

இனி எனது blogஇன் தமிழ் பதிவுகள் மூலமாக நான் இந்த சமுதாயதில் கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை, உணருபவை ஆகிய அனைத்தையும் இந்த உலகுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வளவு நாட்களாக தமிழில் பதிவெழுதாமல் இருந்ததிற்கு காரணங்கள் பல உள்ளன.

• “தமிழில் type செய்ய வேண்டுமே” என்ற சோம்பேறித்தனம்.

• “ஆங்கில புலமையை சிறிதளவு வளர்த்துக்கொள்ள வேண்டுமே” என்ற எண்ணம்.

• “கணினி சார்ந்த உலக செய்திகளை ஆங்கிலத்தில் மட்டுமே கூறினால் போதும்” என்ற குறுகிய மனப்பான்மை

இனி இந்த தடைகளை மீறி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

எனது இந்த பதிவை படிக்க வரும் அருமை நண்பர்களுக்கு எனது சிறு குறைகளை பொறுத்துக்கொள்ள வெண்டுகிறேன்.

• ஒற்று இல்லாமல்/சரியாக இல்லாமல் எழுதுவது.

• கோர்வையாக எழுதாதது

• சில இடங்களில் சுவையைக் கூட்ட ஆங்கில சொற்கள் பயன்படுத்துவது.

ஆகிய குறைகள் இதில் அடங்கும்.

நான் பள்ளி பருவத்தில் இருந்தே இருந்தே மிகவும் ரசித்து படித்து வருகின்ற தினமலர்-வாரமலர் பகுதிகளை as it is copy செய்து எனது blogஇல் இதுவரை paste செய்து வந்தேன். இதற்கு காரணம் “நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெற வேண்டும்” என்பதே.

சிறு வயதில் இருந்தே எனையறியாமல் எனக்குள் ஒரு பழக்கம் உண்டு.   எனது தோல்விகளில் இருந்து மற்றவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த குணம் எனக்குள் ஏன் வந்தது, எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. இந்த குணத்தாலேயே பல நண்பர்களுக்கு “குடும்ப நண்பனாக”(Family Friend) ஆனேன். இதே குணத்தால் இந்த பதிவுலகின் மூலமாக உங்களுக்கும் ஒரு குடும்ப நண்பனாக மாறுவேன் என்ற எண்ணத்தில் இந்த தமிழ் பதிவுலகில் காலெடுத்து வைக்கிறேன்.